Published : 13 Apr 2015 05:53 PM
Last Updated : 13 Apr 2015 05:53 PM
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு மீண்டும் அனுமதி அளித்து மறு பிரகடனம் செய்தது தொடர்பான பொதுநல வழக்கில் குடியரசுத் தலைவர் அதிகாரத்தின் அரசியல் சட்ட வரம்புகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு, மறு பிரகடனத்துக்கான அனைத்து ஆவணங்களையும் வெளியிடுமாறு செய்த மனு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேட்டுள்ளது.
ஏப்ரல் 3, 2015-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளித்து பிரகடனம் செய்தது சட்டப்படி செல்லத்தக்கதாகுமா என்பதைக் கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மார்ச் 28-ம் தேதியன்று மாநிலங்களவைக் கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது, இது, “அரசியல் சாசனச் சட்டம், பிரிவு 123-ன் படி குடியரசுத் தலைவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் பிரதான உதாரணம்” என்று பல்வேறு விவசாய அமைப்புகள் மனு செய்திருந்தன.
இந்த மனுவை ஏற்று அரசியல் சாசன விதிமுறைகளின் கீழ் ஆய்வு செய்ய ஒப்புக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி கேஹர், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் கூறும்போது, 'இந்த மனு பயனளிக்காமல் கூட போக வாய்ப்பிருக்கிறது' என்று எச்சரித்தார்.
மாநிலங்களவை மீண்டும் ஏப்ரல் 23-ம் தேதி கூடும்போது நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பிரச்சினையின்றி அனுமதி கொடுத்தாலும் கொடுக்க வாய்ப்புள்ளது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத சமயங்களில் ஒரு அவசரச் சட்டம் 6 மாத காலம் வரை செல்லுபடியாகும், ஆனால் கூட்டத் தொடர் நடக்கும் சமயத்தில் 6 வாரங்கள் மட்டுமே அவசரச் சட்டம் செல்லுபடியாகும்.
மூத்த வழக்கறிஞர் ஜெய்சிங் உடனடியாக விசாரணை தேவை என்று கூறியதை மருத்த நீதிபதி கேஹர், 4 வாரங்களில் அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி கூறும்போது, “அரசின் பதிலை படித்த பிறகு நில அவசரச் சட்டம் குறித்த உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போக வாய்ப்புள்ளது.
அதற்கு வழக்கறிஞர் ஜைசிங் பதிலளிக்கையில், “நீதிமன்றம் முதல் முறையாக இத்தகைய வழக்குகளை சந்திக்கவில்லை. 4 வாரங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளீர்கள், என்னுடைய மனு பலனளிக்காமல் போய் விட நீதிபதிகள் விரும்புவது போல் தெரிகிறது.” என்றார்.
இந்த விவகாரத்தில் மாநிலங்களவையின் சட்ட அமலாக்க நடைமுறைகளை அரசு மீறியுள்ளது என்பதே தற்போதைய பொதுநல மனுவின் சாராம்சம். மேலும் அரசியல் சாசனத்தையே மோசடி செய்கிறது இந்த அவசரச் சட்ட மறுபிரகடனம் என்கிறது இந்த மனு.ஆட்சியாளர்கள் முறைப்படி சட்டம் இயற்றுவதற்கு பதிலீடாக அவசரச் சட்டம் இயற்றப் பட முடியாது, ஏனெனில் ராஜ்யசபா இந்த மசோதாவை ஏற்கவில்லை எனும்போது அவசரச் சட்டம் எப்படி முறையான சட்டமாக மாற இயலும்? என்று கேள்வி எழுப்புகிறது இந்த மனு.
மேலும், எந்த அசாதாரணச் சூழல் இந்த அவசரச் சட்டத்தை கட்டாயமாக்குகிறது என்பதை இந்த அவசரச்சட்ட்ம் குறிப்பாக கூடக் காட்டவில்லை. மேலும், உச்ச நீதிமன்றம். ‘அவசரச் சட்ட ராஜ்ஜியம்’ அனுமதிக்கப் பட முடியாதது என்றும் இது அரசியல் சாசனத்தை மோசடி செய்வதாகும் என்றும் கண்டித்த பிறகும் எப்படி இது சாத்தியமாகியது? என்றும் இந்த பொதுநல மனு கேள்வி எழுப்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT