Published : 04 Apr 2015 08:55 AM
Last Updated : 04 Apr 2015 08:55 AM
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் குறைகளை கண்டுபிடிப்பதைவிட காணாமல்போன தலைவரை (ராகுல் காந்தியை) கண்டுபி டியுங்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காங்கிரஸை கடுமையாக தாக்கிப் பேசினார்.
இதேபோல் பிரதமர் மோடியும் காங்கிரஸை கடுமையாக தாக்கி பேசினார்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் உள்ள லலித் அசோக் ஓட்டலில் நேற்று காலை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி உட்பட 111 தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு தலைமை ஏற்று அமித் ஷா பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஊழல் ஆட்சியை மோடி தலைமையிலான பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போது நாட்டில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 10 முதல் 20 ஆண்டு களுக்கு மோடியே ஆட்சியில் இருப்பார்.
ராகுலை கண்டுபிடியுங்கள்
தற்போது காங்கிரஸ் கட்சி தன்னம்பிக்கை இழந்து தவிக் கிறது. மத்திய அரசில் இல்லாத குறைகளை எல்லாம் சல்லடை போட்டு தேடி கண்டு பிடிக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் ஏதாவது கண்டுபிடித்தே தீர வேண்டும் என விரும்பினால் ஓர் ஆலோசனை தருகிறேன். குறைகளை கண்டு பிடிப்பதைவிட காணாமல் போன உங்களுடைய தலைவரைத் தேட லாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அமித் ஷா இவ்வாறு பேசினார்.
காங்கிரஸ் மீது மோடி தாக்கு
‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அனைத்து நலத் திட்டங்களும் முடங்கிக் கிடந்தன. கொள்கை சார்ந்த வலுவான முடிவுகள் எதுவும் எடுக்கப் படவில்லை. இந்த போக்கு என்னைப் போன்று இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்று பிரதமர் மோடி பேசினார்.
அத்வானிக்கு நாற்காலி மறுத்த மோடி
செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோ டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து குத்து விளக்கை ஏற்ற அமிஷ் ஷா அழைக்கப்பட்டார். மூன்றாம் நபராக ராஜ்நாத் அழைக்கப்பட்ட பிறகே அத்வானி மேடையேற்றப்பட்டார். அப்போது அத்வானியின் முகம் இறுக்கமாக காணப்பட்டது.
இதையடுத்து மேடையின் நடுவில் பிரதமர் மோடி அமர வைக் கப்பட்டார்.மோடிக்கு அருகில் இருந்த நாற்காலியில் அத்வானி அமர முற்பட்டார். அதற்குள் மோடி, அமித் ஷாவை அழைத்து அதில் அமர வைத்தார். இதனால் மற்ற தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து மூன்றாவது நாற்காலி யில் அத்வானி அமர வைக்கப்பட் டார். இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல நேற்று முன்தினம் இரவு செயற்குழு நடக்கும் லலித் அசோக் ஓட்டலில் மோடி, வாஜ்பாய், அத்வானி, அமித் ஷா ஆகியோரின் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் செயற்குழு தொடங்குவதற்கு முன்பாக அத்வானி இடம் பெற்றிருந்த பேனர் அகற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT