Published : 06 Apr 2015 02:50 PM
Last Updated : 06 Apr 2015 02:50 PM
நில மசோதாவுக்கு எதிரான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய அவர், "நிலச் சட்டம் தொடர்பான அவதூறு கருத்துகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றன.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் வரம்பில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி, வனப் பகுதி வராது. ஆனால், இச்சட்டத்தால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவர், வனங்கள் அழிக்கப்படும் என்ற தவறான செய்தி பரவி வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக சரியான புரிதல் இல்லாதவர்களே இத்தகைய வதந்திகளை பரப்புகின்றனர்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் மக்களை திசை திருப்ப வேண்டாம். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மக்கள் உணர்வுகளை புண்படுத்தும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT