Published : 16 Apr 2015 02:37 PM
Last Updated : 16 Apr 2015 02:37 PM
நாளை சுதந்திர தினத்தை கொண்டாடும் தென் ஆப்பிரிக்க மக்களுக்கும் அரசுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி, தென் ஆப்பிரிக்க குடியரத் தலைவர் ஜேக்கப் கெட்லேயிலேகிசா ஜீமா-விற்கு எழுதியுள்ள வாழ்த்து செய்தியில் "தென் ஆப்ரிக்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு தென் ஆப்ரிக்க மக்களுக்கும் அரசுக்கம் இந்திய அரசு சார்பாகவும், இந்திய மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்து தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான உறவு வரலாற்று பெருமை உடையது. இந்த இருதரப்பு உறவு ஒவ்வொரு ஆண்டும் வலுவடைந்து வருகிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்து தரப்பிலும் நமது உறவு வேரூன்றி நிற்கிறது.
இப்சா மற்று பிர்க்ஸ் மன்றங்களில் உள்ள நமது ஒத்துழைப்பு நமது உறவை மேலும் பலப்படுத்துகிறது. வரும் ஆண்டுகளில் இந்த இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்து இரு நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உங்களது உடல் நலத்திற்கும், நல்வாழ்விற்குமான எனது வாழ்த்துகளையும் தென் ஆப்பிரிக்கா மக்களின் முன்னேற்றத்திற்குமான எனது வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT