Last Updated : 01 Apr, 2015 08:29 AM

 

Published : 01 Apr 2015 08:29 AM
Last Updated : 01 Apr 2015 08:29 AM

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம்: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தகவல்

நாட்டின் முதல் தேசிய வேலை வாய்ப்பு வழிகாட்டு மையம் ஹரியாணா மாநிலம் ஹிசாரில் தொடங்கப்படும் என்றும் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 978-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 4 கோடிக்கும் மேற்பட் டோர் பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் புதிதாக 50 லட்சம் பேர் பதிவு செய்து வருகின்றனர்.

எனவே அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டு மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:

நாட்டின் முதல் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் ஹரியாணா மாநிலம் ஹிசாரில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும்.

தனியார் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து இளைஞர்களுக்கு மாதந்தோறும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும்.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும்.

பி.எப். நிதி தொடர்பாக இதுவரை ஒரு கோடியே 19 லட்சம் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.எப். திட்டத்தில் இணையதள சேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தொழிலாளர்களின் சுமை குறைந் துள்ளது. சுமார் ரூ.27 ஆயிரம் கோடி பி.எப். தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x