Last Updated : 01 Apr, 2015 05:21 PM

 

Published : 01 Apr 2015 05:21 PM
Last Updated : 01 Apr 2015 05:21 PM

பெண்களின் நிறம் பற்றி சர்ச்சைக் கருத்தை சொன்னாரா கோவா முதல்வர்?

பெண்களின் நிறம் குறித்து விமர்சிக்கத்தக்க கருத்தைக் கூறியதாக, கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

அதேவேளையில், தாம் அத்தகைய கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவாவில் 108 ஆம்புலன்ஸ் பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவா முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகரை சந்தித்த செவிலியர்கள் நேரடியாக தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவல் வெளியிட்ட செவிலியர் ஒருவர், "முதல்வரிடம் நாங்கள் கோரிக்கையைச் சொன்னோம். அப்போது, ' நீங்கள் வெயிலில் உண்ணாவிரதம் இருந்தால் கறுத்து விடுவீர்கள். இது உங்களுக்கான திருமண வாய்ப்புக்களை பாதித்து விடும்.

எனவே போராட்டங்களை கைவிடுங்கள்' என்று முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர் கூறினார்" என்று தெரிவித்திருந்தார்.

செவிலியர் ஒருவர் வெளியிட்ட அந்தத் தகவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கோவா முதல்வர் கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகர், "நான் அத்தகைய கருத்தை கூறவே இல்லை. எனது பேச்சு தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது" என்று விளக்கம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x