Published : 28 Apr 2015 08:57 AM
Last Updated : 28 Apr 2015 08:57 AM
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) நிலநடுக்கவியல் நிபுணர் ஒருவர் கூறியதாவது:
வட இந்தியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று நாசா முன்னறிவிப்பு வழங்கியதாக பரவி வரும் செய்தி போலியானது. நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று நாசாவால் முன்கூட்டியே கணிக்க முடியாது. எந்த நாட்டில் உள்ள எந்த ஒரு அமைப்புமே இதை கணிக்க முடியாது.
அந்த அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சியடையவில்லை. எனவே, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற் காகவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படு கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாசா முன்னறிவிப்பு செய்ததாகக் கூறி செல்போன்கள் மற்றும் சமூக வலைதலங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது. அதில், “இரவு 8.06 மணிக்கு வட இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும். இது ரிக்டரில் 8.2 அளவுக்கு இருக் கும் என நாசா தெரிவித்துள்ளது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பரிமாறுங் கள்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT