Published : 23 Apr 2015 08:35 AM
Last Updated : 23 Apr 2015 08:35 AM

ஐஏஎஸ் அதிகாரி ரவி மரண வழக்கில் கர்நாடக அமைச்சர், பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் விசாரணை: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

பெங்களூருவில் மர்மமான முறையில் மரணமடைந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி வழக்கில் சிபிஐ போலீஸார் இன்று மீண்டும் விசாரணையை தொடங்குகின்றனர். கர்நாடக உள்துறை அமைச்சர், பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக வணிக வரித் துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய டி.கே.ரவி, கடந்த மார்ச் 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஐஏஎஸ் அதிகாரியின் திடீர் மரணம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

இதையடுத்து கர்நாடக அரசு ரவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என காலக்கெடு விதித்தது. இதற்கு சிபிஐ போலீஸார், “ஒரு வழக்கு விசாரணையில் அரசு காலக்கெடு விதிப்பதை ஏற்க முடியாது. சட்டப்படி விசாரணைக்கு காலக்கெடு விதிக்க முடியாது'' என தெரிவித்தனர்.

மேலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை பாதியிலே நிறுத்திவிட்டு சென்னைக்கு திரும் பினர். இதையடுத்து கர்நாடக அரசு கடந்த வாரம் காலக்கெடுவை நீக்கி புதிய அரசாணை பிறப் பித்தது. எனவே சிபிஐ போலீஸார் இன்று மீண்டும் டி.கே.ரவி வழக்கில் விசாரணையை தொடங்குகின்ற னர். இதற்காக சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை பெங்களூரு வந்தனர்.

இது தொடர்பாக சிபிஐ போலீ ஸார் வட்டாரத்தில் விசாரித்த போது, “டி.கே.ரவியின் மரணம் தொடர்பாக முதலில் விசாரித்த சிஐடி போலீஸாரின் அறிக்கை ஆய்வு செய்யப்படும். அதே போல ரவியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் கள், உடன் பணியாற்றிய அதிகாரிகள், குடும்பத்தினரிடம் விசாரிக்கப்படும். மேலும் சிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரியிடம் விசாரணை நடத்தப்படும்.

இறப்பதற்கு முன்பாக ரவி அதிரடி சோதனையிட்ட ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், மணல் கொள்ளையர்கள், மிரட்டல் விடுத்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்.

இதுமட்டுமில்லாமல் தொடக் கம் முதலே ரவியின் வ‌ழக்கில் கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.

பெங்களூருவில் கே.ஜே. ஜார்ஜ் கடந்த மே மாதம் தனது மனைவி சுஜா பெயரில் பல இடங்களில் சட்ட விரோதமாக நிலம் வாங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. எனவே அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படலாம்''என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x