Published : 22 Apr 2015 07:41 PM
Last Updated : 22 Apr 2015 07:41 PM

ஓட்டுநர்கள் சாதுரியத்தினால் ஆந்திராவில் கோர விபத்து தவிர்ப்பு: 58 மாணவர்கள் உயிர் தப்பினர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே லெவல் கிராசிங்க் கேட்டை மூடாததால் ஏற்படவிருந்த மோசமான விபத்து பாசஞ்சர் ரயில் மற்றும் ஆந்திர அரசு பேருந்து ஓட்டுனர்களின் சமயோசிதத்தினால் தவிர்க்கப்பட்டது.

இதனால் பேருந்தில் இருந்த 58 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இன்று (புதன்) மாலை, ஸ்ரீகாகுளம் படாபட்னம் அருகே லெவல் கிராசிங்கில் கேட்கள் மூடப்படாமல் இருந்தது. ஆனால் ரயில் வந்து கொண்டிருந்தது. பஸ் ஓட்டுநரோ கேட் திறந்திருக்கிறது என்று பேருந்தை ரயில் பாதைக்குள் செலுத்தியுள்ளார்.

ஆனால் சற்று தொலைவில் விசாகா-குனுபூர் பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்ததை பஸ் ஓட்டுநர் கண்டுணர்ந்தார். உடனடியாக ரிவர்ஸ் கியரைப் போட்டு பேருந்தை பின்னால் செலுத்தி ஆபத்திலிருந்து காப்பாற்றினார். பயணிகள் ரயில் ஓட்டுநரான ரமணாவும் ரயிலை சிறிது தொலைவில் நிறுத்தினார். காரணம் ரயில் சாதாரண வேகத்தில் வந்து கொண்டிருந்தது என்பதே.

இது பற்றி உள்ளூர் மக்கள் கூறும்போது, ‘ரயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது, இல்லையெனில் ஒரு கொடூர விபத்து நிகழ்ந்திருக்கும்’ என்றனர்.

பயணிகளுக்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்து கொள்ள சிறிது நேரம் பிடித்துள்ளது, பிறகே அவர்கள் மன நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

கேட்டை மூடாமல் சென்ற ரயில்வே ஊழியரின் பொறுப்பின்மை குறித்து மக்கள் கொதிப்படைந்தனர்.

பயணிகள் இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x