Last Updated : 19 Apr, 2015 09:40 AM

 

Published : 19 Apr 2015 09:40 AM
Last Updated : 19 Apr 2015 09:40 AM

தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்குமா? - ஒருங்கிணைந்த ஜனதா கட்சிகளும் கோருவதால் சிக்கல்

சமீபத்தில் ஒரே அமைப்பாக இணைந்த ஜனதா கட்சிகள் (ஜனதா பரிவார்), சைக்கிளை தங்கள் தேர்தல் சின்னமாக ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரவுள்ளன.

தமிழ்நாட்டில் ஜி.கே.வாசன் தலை மையிலான தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சியும் இந்த சின்னத்தை கோரி யுள்ளதால் இதை யாருக்கு ஒதுக்குவது என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்வதில் சிக்கல் எழலாம் என கருதப்படுகிறது.

உ.பி.யில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சின்னமாக சைக்கிள் உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், சமாஜ்வாதி ஜனதா ஆகிய 6 கட்சிகளும் சமீபத்தில் ஒரே அமைப்பாக இணைந்தன.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தையே புதிய கட்சியின் சின்னமாக தேர்தல் ஆணையத்திடம் கோருவதற்கு இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதனிடையே 1996-ல் ஜி.கே.மூப்ப னார் தலைமையில் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. மூப்பனார் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன் தலைமையில் செயல்பட்ட இக்கட்சி 2004-ல் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்தது. என் றாலும் அப்போது தமாகா முறையாக கலைக்கப்படாததுடன் தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்தது.

இந்நிலையில் ஜி.கே.வாசன் தற்போது காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் தமாகா-வை தொடங்கி யுள்ளார். இவர் தேர்தல் ஆணையத் துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தாங்கள் ஏற்கெனவே பயன்படுத்திய சைக்கிள் சின்னத்தையே மீண்டும் ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு அமல்படுத் தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் புதிய சட்டப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு அதன் பிறகு ஒதுக்க வாய்ப்பில்லாமல் போனது.

இது குறித்து தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணைய உறுப்பினரும் வாசனின் ஆதரவாளருமான எஸ்.கே.கார்வேந்தன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கடந்த 2011, செப்டம்பர் 16-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்சி மற்றும் சின்னம் தொடர்பான தேர்தல் சட்டத் திருத்தத்தின் உட் பிரிவான 10-பி எங்களுக்கு சாதக மாக உள்ளது. இந்தப் புதிய பிரிவில், 6 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங் கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சலுகை வழங்கப் பட்டுள்ளது. இக்கட்சிகள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முன்வரும் போது ஏற்கெனவே பயன்படுத்திய சின்னத்தை மீண்டும் ஒருமுறை பயன் படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. எனவே இந்த 10-பி உட்பிரிவின் படி 2004-ல் அங்கீகாரம் இழந்த தமாகா-வுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

ஒரு அமைப்பாக இணைந்துள்ள ஜனதா கட்சிகள் பிராந்தியம் மற்றும் தேசியக் கட்சிகளாக அங்கீகரிக் கப்பட்டவை. இவை புதிய கட்சியாகப் பதிவு செய்யப்படும்போது, இதில் உள்ள 6 கட்சிகளும் ஏற்கெனவே பெற்றிருந்த அங்கீகாரம் மீதான பல்வேறு சலுகைகளை இழக்க வேண்டியிருக்கும். அந்த 6 கட்சிகளில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மட்டுமே தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

எனவே அந்தக் கட்சியின் பெயரை மட்டும் மாற்றுவதன் மூலம், அதற்கு தேசிய அங்கீகாரம் மற்றும் சைக்கிள் சின் னத்தை தக்கவைத்து கொள்வது அவர்களின் உத்தியாக உள்ளது. இதற் கான யோசனை தமிழகக் கட்சியிடம் இருந்து கிடைத்ததாக தெரிவித்தனர்.

இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டதை தொடர்ந்து நாட்டில் மாநிலக் கட்சிகள் ஒழிக்கப்பட்டு, தேசியக் கட்சிகள் மட்டுமே இருக்கும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தனது கட்சியின் பெயருக்கு முன்னால் அகில இந்திய என்ற பெயரை சேர்த்தார். இத னால் அக்கட்சிக்கு கொடி மற்றும் சின்னத்தில் எந்த இழப்பும் ஏற்பட வில்லை.

கடந்த 2011, செப்டம்பர் 16-ல் அமல்படுத்தப்பட்ட தேர்தல் சட்ட விதிமுறைகளில் சில, இனி புதிதாக துவக்கப்படும் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால், 2011-க்கும் முன் ஆந்தி ராவில் துவக்கப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. எனவே, மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா என்பது, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பாக முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x