Last Updated : 12 Apr, 2015 04:11 PM

 

Published : 12 Apr 2015 04:11 PM
Last Updated : 12 Apr 2015 04:11 PM

முஸ்லிம்கள் வாக்குரிமையை ரத்து செய்க: சிவ சேனா

வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவ சேனா கட்சி தெரிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான ஒரு கட்டுரையில் சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் இயக்கத்தின் தலைவர் ஓவாய்ஸி, சிவ சேனா கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், "தைரியம் இருந்தால் உத்தவ் தாக்கரே ஹைதராபாத்துக்கு வரட்டும்" என மிரட்டும் தொணியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில், சஞ்சய ரவுத் எழுதியுள்ள கட்டுரையில், "சகோதரர் ஒவாய்ஸி அவர்களே. முஸ்லும் வாக்குகள் விற்கப்படும் வரை அந்தச் சமூகம் பின் தங்கியே இருக்கும். ஆனால், அச்சமூகத்தின் தலைவர்கள் மட்டும் பணக்காரர்களாவர்.

நீங்கள், முஸ்லிம் வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்வதால் உங்கள் சமூகத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்றால்? அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியல் தேசத்துக்கு கேடு விளைவிக்கும்.

எனவே, வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். இக்கருத்தை சிவ சேனாவை நிறுவிய பால் தாக்கரேவும் ஆதரித்தார்" என குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரை மராத்தி மொழியில் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x