Published : 15 Apr 2015 10:25 AM
Last Updated : 15 Apr 2015 10:25 AM
நாட்டில் உள்ள முதிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே அக்கறை எடுத்துக்கொண்ட முதல் கட்சி பாஜகதான் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
60 வயதில் விவசாயிகளுக்கு, கடினமான பணிகளைச் செய்யும் திறன் குறைந்து போகும். அதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT