Published : 14 Apr 2015 10:52 AM
Last Updated : 14 Apr 2015 10:52 AM
உலக டென்னிஸ் மகளிர் பிரிவு இரட்டையர் தர வரிசையில் முதலிடம் பிடித்த சானியா மிர்சாவுக்கு வாழ்த்து தெரிவித்த எழுத்தாளர் ஷோபா டே, சிவசேனாவையும் கிண்டலடித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ‘மல்டிபிளக்ஸ்’களில் மராத்தி மொழி திரைப்படங் களைக் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று மாநில அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல எழுத்தாளர் ஷோபா டே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், மும்பையில் உள்ள ஷோபா டேவின் இல்லத்தை நோக்கி சிவசேனா தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்றனர். வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள், மகாராஷ்டிராவை ஷோபா டே அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி கோஷமிட்டனர்.
இந்நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், அதிகார பூர்வ கட்சி பத்திரிகையான சாம்னா வில் 2 நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில், ‘‘ஓட்டு வங்கியை நம்பி முஸ்லிம்கள் அரசியல் நடத்து கின்றனர். முஸ்லிம் ஓட்டுகள் விற்கப்படும் வரை, அந்த சமூகம் பின்தங்கியே இருக்கும். மேலும், ஓட்டு வங்கி அரசியலை ஒழிக்க வேண்டுமானால், முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும். இதைத்தான் சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரே வலியுறுத்தினார்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘‘இதுபோன்ற பேச்சு களைக் கேட்கும் போது வெறுப்பாக இருக்கிறது. ஜனநாயக நாட்டில் நாம் வசிக்கிறோம். தலிபான் தீவிரவாதிகள் உள்ள நாட்டில் நாம் இல்லை’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உலக டென்னிஸ் மகளிர் பிரிவு இரட்டை யர் தரவரிசையில் முதல்முறையாக இந்தியாவின் சானியா மிர்சா முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித் துள்ள ஷோபா டே, அப்படியே சிவசேனாவையும் கிண்டலடித் துள்ளார். ட்விட்டரில் ஷோபா டே கூறும்போது, ‘‘சானியா மிர்சா, உலக சூப்பர் ஸ்டார், இந்தி யாவின் பெருமை, மக்களின் டார்லிங். அவருக்கு இன்னும் ஓட்ட ளிக்கும் உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித் துள்ளார்.
சானியா மிர்சா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். பாகிஸ் தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திரு மணம் செய்து கொண்டார். அதற்கு சில தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ‘‘நான் எப்போதும் இந்திய குடிமகள்தான். அதை யாரும் மாற்ற முடியாது’’ என்று சானியா மிர்சா ஆவேசமாகப் பதில் அளித்தார். இந்நிலையில், முஸ்லிம்களின் ஓட்டுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று சிவசேனா தலைவர் கூறியதைக் கிண்டல் செய்யும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஷோபா டே கருத்துத் தெரிவித் துள்ளார். இதனால் சிவசேனாவுக் கும் ஷோபா டேவுக்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT