Published : 22 Apr 2015 03:54 PM
Last Updated : 22 Apr 2015 03:54 PM
பருவ நிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்ட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பூமி தினம் அணுசரிக்கப்படுவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "பருவ நிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகளுக்கு இந்தியா வழிகாட்ட முடியும். ஏனெனில், இயற்கையை பேணுவது இந்திய கலாச்சாரத்தில் இரண்டரக் கலந்திருக்கிறது.
நாம் அனைவரும் பூமித் தாயின் பிள்ளைகள் என உறுதியாக நம்பும் கலாச்சாரத்தில் பிறந்திருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்து அண்மையில் பேசிய பிரதமர், "சராசரியாக ஓராண்டில் இந்தியாவில் இருந்து வெளியேறும் கார்பன் நச்சு மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
வளர்ந்த நாடுகள் வேண்டுமென்றே இந்தியா மீது குறை கூறுகின்றன. பிரான்ஸில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச கருத்தரங்குக்கான கொள்கையை இந்தியாவே வகுக்கும்" என பிரதமர் பேசியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT