Published : 25 Apr 2015 05:47 PM
Last Updated : 25 Apr 2015 05:47 PM
நேபாள நிலநடுக்கத்தின் தாக்கமாக உத்திரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கட்டடம் இடிந்து விழுந்தது மற்றும் சுவர்கள் பல இடிந்தன. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 12 பேர்களுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் 8 வயது சிறுமியும் அடங்குவார்.
உயிரழந்தோர் குடும்பத்துக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகையையும், சிறு காயமடைந்தோருக்கு ரூ.20,000 தொகையையும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT