Published : 02 Apr 2015 05:23 PM
Last Updated : 02 Apr 2015 05:23 PM
காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை முடிந்தது என்று கூறிய பாதுகாப்ப்பு அதிகாரிகள், தீவிரவாதிகள் தப்பிவிட்டதாகத் தெரிவித்தனர்.
இன்று (வியாழன்) பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது, இதில் ராணுவ வீரர் மற்றும் போலீஸ் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஆனால் சண்டையின் போது பாதுகாப்பு வளையத்தை உடைத்து தீவிரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி சுஹைல் முனாவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும் போது, “துப்பாக்கிச் சண்டை முடிந்து விட்டது. தீவிரவாதிகள் 2 அல்லது 3 பேர் இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர், நாங்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளோம்” என்றார்.
இன்று காலை சுமார் 8 மணியளவில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.
“இன்று அதிகாலை கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தாக்குதல் திட்டமிடப்பட்டது. எங்களது படையினர் இன்று காலை 7.50 மணியளவில் தீவிரவாதிகளுடன் சண்டையிடத் தொடங்கினர். சண்டையில் ராணுவ வீரர் மற்றும் காவலர் ஒருவர் கொல்லப்பட்டனர். வேறு ஒருவரும் காயமடைந்தார்” என்று இந்திய ராணுவ உயரதிகாரி பிரிஜேஷ் பாண்டே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT