Published : 17 Apr 2015 07:54 AM
Last Updated : 17 Apr 2015 07:54 AM
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களின் பேரணியில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏந்திச்சென்ற விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று அந்த மாநில முதல்வர் முப்தி முகமது சையது தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவர்கள் நேற்றுமுன்தினம் பேரணி நடத்தி னர். அப்போது பாகிஸ்தான் கொடி ஏந்திச்சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானி, மஸ்ரத் ஆலம் பட் உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நிருபர் களிடம் முதல்வர் முப்தி முகமது சையது நேற்று கூறியதாவது:
பிரிவினைவாத தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் தேச விரோத நடவடிக்கைகள் நடந்துள்ளதாக தெரியவருகிறது. யாராவது தவறு செய்திருந்தால் சட்டம் தனது கடமையை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
கிலானி, பட், பஷீர் அகமது பட் என்கிற பீர் சைபுல்லா மற்றும் இதர பிரிவினைவாத தலைவர்கள் மீது ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டதாகவும் ஹைதர்புரா பகுதியில் பாகிஸ்தான் தேசியக் கொடி கொண்டு சென்றதாக வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் இருந்த சில சமூக விரோதிகள் சிஆர்பிஎப் வாகனங் கள் மீது கல்லெறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்புப்படை வீரர்கள் நிதானத்தை கடை பிடித்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவங்களுக்கு பல் வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மாநில முதல்வர் முப்தி முகமது சையதுவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது பேரணியில் நடந்த விவகாரங்களை முதல்வர் முப்தி விவரித்தார். அதற்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
கிலானியால் சர்ச்சை
டெல்லியில் சில மாதங்களாக தங்கியிருந்த கிலானி அங்கிருந்து அண்மையில் நகருக்கு திரும் பினார். விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அவர் பேரணியாக அழைத்துச்செல்லப்பட்டார்.
பாகிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலம் கடந்த மாதம் சிறையில் இருந்து விடுவிக் கப்பட்டார். அவரது தலைமை யில்தான் கிலானி பேரணியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறிய போது, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடவில்லை, காஷ்மீர் மக்களின் விருப்பங் களைத்தான் வெளிப்படுத்து கிறோம் என்றார்.
பேரணி, பொதுக்கூட்டம் நடத்து வதற்கு கிலானிக்கு தடை விதிக் கப்பட்டிருந்தது. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு நேற்று முன்தினம் பேரணி நடத்த அவருக்கு அனுமதி அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரிவினை வாதிகளின் செயலைக் கண்டித்து காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் சிவசேனா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலமின் உருவப்படம் மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகள் எரிக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் நவாங் ரிக்ஜின் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அரசு மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டது. தேசப் பாதுகாப்பை பாஜக தியாகம் செய் துள்ளது, காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT