Published : 02 Apr 2015 03:27 PM
Last Updated : 02 Apr 2015 03:27 PM
கடந்த 80 ஆண்டுகளாக நாட்டின் பரந்துபட்ட பொருளாதார சூழ்நிலைகளை மேம்படுத்துவதில் மத்திய ரிசர்வ் வங்கி தொழில் நேர்த்தியுடன் பணியாற்றியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை புகழ்ந்து பேசியுள்ளார்.
மும்பையில் மத்திய ரிசர்வ் வங்கியின் 80-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி கூறியதாவது:
1935-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நாட்டின் பலதரப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை ஆர்.பி.ஐ. தன் தோள்களில் சும்ந்து வந்துள்ளது.
நாட்டின் நிதிக்கொள்கையை நிர்வகிப்பது முதல், பணவீக்கம், ரூபாய் மதிப்பு, வங்கித்துறை ஒழுங்குமுறையாக்கம், பொதுக்கடன் மேலாண்மை என்று தொழில் நேர்த்தியுடன் மத்திய ரிசர்வ் வங்கி நாட்டுக்காக சேவையாற்றியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் இந்தத் தொழில் நேர்த்தி நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய சேவையாற்றியுள்ளது. ஆர்.பி.ஐ. செயல்பாடுகள் குறித்து நாம் உண்மையில் பெருமையடைகிறோம்.
நாம் முதலீடுகளுக்காக கதவுகளை திறந்து விட்டுள்ளோம். வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் சரளமாக பயன்பட இந்தியப் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை மீட்டுள்ளோம்.
வரிவிதிப்பு ஒழுங்கு முறையை மேலும் அறிவுபூர்வமாக்கியுள்ளோம். நேரடி மற்றும் மறைமுக வரிகளில் மைல்கல்லான சில மாற்றங்களைச் செய்துள்ளோம்.
பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா திட்டம் அபாரமாக வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த வங்கிகளின் செயல்பாடுகளும் பாராட்டுதலுக்குரியது” என்றார் அருண் ஜேட்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT