Last Updated : 15 Apr, 2015 08:39 AM

 

Published : 15 Apr 2015 08:39 AM
Last Updated : 15 Apr 2015 08:39 AM

அம்பேத்கர் விழாவுக்கு அழைக்கவில்லை: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா குற்றச்சாட்டு

பிஹார் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற அம்பேத் கர் பிறந்தநாள் விழாவுக்கு உள்ளூர் எம்.பி.யான தன்னை கட்சி அழைக்கவில்லை என நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அம் பேத்கர் விழாவுக்காக வைக் கப்பட்ட விளம்பர பதாகை கள், சுவர் விளம்பரங்களில் எனது பெயரோ, படங்களோ வைக்கப்படவில்லை.விழா வில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை.

திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த போது கட்சியில் இணைந் தேன். கட்சிக்கு ஊறுவிளை விக்க கனவிலும் நினைக்க வில்லை. கட்சியில் எனது புகழ், வளர்ச்சியைப் பார்த்து அஞ்சும் சிலர் நான் நிகழ்ச்சியில் பங்கேற்பதை விரும்பவில்லை, பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் இந்த வாய்ப்பை பயன் படுத்தி பாஜகவை விமர் சித்து வருகிறார். தங்கள் கட்சி முக்கியப் பிரமுக ரையே கவனிக்காத அவர்கள் (பாஜக) மக்களை எப்படிக் கவனிப்பார்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x