Published : 21 Apr 2015 01:22 PM
Last Updated : 21 Apr 2015 01:22 PM
பிரதமர் நரேந்திர மோடி அவர் பொறுப்பேற்ற 10 மாதங்களில் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது பலதரப்பிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோடியின் பயணங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, "மோடி வெளிநாட்டுப் பயணம் தவறல்ல... ஆனால் அவர் இந்தியாவுடன் பாரம்பரிய நட்புறவு கொண்ட ஆப்பிரிக்காவுக்கும் செல்ல வேண்டும்.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற கவர்ச்சிகரமான நாடுகளுக்கு செல்வதுடன் நம்முடன் பாரம்பரிய நட்புறவு கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் மற்ற பிற நாடுகளுக்கும் செல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT