Published : 31 Mar 2015 03:04 PM
Last Updated : 31 Mar 2015 03:04 PM
தனிப் பொறுப்புடன் கூடிய மத்திய இணையமைச்சர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்களது பணி மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்து மக்களிடம் எழுந்துள்ள கருத்துகளையும் கேட்டறிந்தார்.
90 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அமித் ஷா உடனிருந்தார். மொத்தம் 13 அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அரசில் அவர்கள் பெற்றுள்ள அனுபவம், அமைச்சக பணியில் ஏதாவது இடையூறுகள் உள்ளனவா என்றும் விசாரித்து தெரிந்து கொண்டார்.
கட்சியின் அடிமட்டத் தொண் டர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அது, அரசின் கொள்கை களை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் அவசியம். அதேபோல அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நிலக்கரி, பெட்ரோலியம், சுற்றுச் சூழல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை போன்ற அமைச்ச கங்கள் தனிப்பொறுப்புடன் கூடிய இணை யமைச்சர்களிடம் உள்ளன.
இப்போது நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்ட விஷயத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கையாளுகிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டு விவசாயிகள், மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தாங்கள் கொண்டுவரும் சட்டம் மக்கள் நலன் சார்ந்தது என்பதையும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் மோடி, அமைச் சர்களை சந்தித்திருப்பது முக்கியத் துவம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT