Last Updated : 20 Apr, 2015 11:14 AM

 

Published : 20 Apr 2015 11:14 AM
Last Updated : 20 Apr 2015 11:14 AM

அரசியல் கட்சிகளுக்கு தரும் நிறுவனங்களின் நன்கொடைக்கு தடை விதிக்கக் கூடாது: பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்

கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்களர்களுக்கு நிறுவனங்கள் நேரடியாக நன்கொடை வழங்குவதை தடை செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக கட்சிகளின் கருத்தறிய அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் ஆணையத்தின் பரிந்துரையை வரவேற்றனர். ஆனால் பாஜகவும் காங்கிரஸும் ஆட்சேபம் தெரிவித்தன.

பாஜக தரப்பில் அந்தக் கட்சியின் செயலாளர் அர்ஜுன் சிங் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியபோது, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறுவனங்களின் நன்கொடைகளை அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார். மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த நிறுவனங்கள் தங்களது 3 ஆண்டு லாபத்தில் 7.5 சதவீதத்துக்கு குறைவாக கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். அந்த விதியை தொடர்ந்து பின்பற்றலாம் என்று அர்ஜுன் சிங் யோசனை தெரிவித்தார்.

காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

நிறுவனங்களின் நன்கொடை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், பணமாக அளித்தால் அதில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, நன்கொடைகளை காசோலைகளாக வழங்கலாம், அந்த நன்கொடை விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x