Published : 09 Apr 2015 08:45 AM
Last Updated : 09 Apr 2015 08:45 AM
ஆந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட் டுள்ள அறிக்கை:
ஆந்திர மாநிலத்தில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ கண்டிக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் கூலிக்கு மரம் வெட்டுபவர்கள்.
ஏற்புடையதல்ல
தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில், காவல்துறைக்குச் சாதகமான ஆதாரங்கள் இல்லை. எனவே, தற்காப்புக்காக சுட்டோம் என்ற காவல்துறையின் கருத்து ஏற்புடையதல்ல.
இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கொல்லப்பட்டவர் களின் உறவினர்களுக்கு ஆந்திர அரசு முழு இழப்பீட்டை வழங்க வேண்டும்.
தெலங்கானா மாநிலத்தில் 5 விசாரணைக் கைதிகள் என்கவுன்ட்டர் என்ற பெயரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளை மூடி மறைக்கக்கூடாது. சிமி இயக்கத் தினரால் 2 காவல் துறை அதி காரிகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதத்தில் இந்த என்கவுன்ட்டர் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக உயர்நிலை அளவிலான விசா ரணை நடத்தப்பட்டு, குற்றம்புரிந்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT