Published : 15 Apr 2015 12:49 PM
Last Updated : 15 Apr 2015 12:49 PM
நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவின் ஆண்டு மொத்த விற்பனை பணவீக்க புள்ளிவிவரங்களை நேற்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்டது. இதில் கடந்த ஐந்து மாதங்களாக மொத்த விற்பனை பணவீக்கம் படிப்படியாக குறைந்து வந்துள்ளது.
2014 மார்ச்சில் மைனஸ் 2.33 சதவீதமாக இருந்த மொத்த விற்பனை பணவீக்கம் மார்ச் 2015ல் மைனஸ் 2.06 சதவீதமாக உள்ளது. கடந்த மாதத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவு காரணமாகவும் மொத்த பணவீக்கம் குறைந்துள்ளது.
மார்ச் மாத நிலவரத்தில் வெங்காயத்தின் விலை இந்த ஆண்டு 36.49 சதவீதம் அதிகரித்துள்ளது. தானியங்கள் 23.22 சதவீதமும், காய்கறிகள் 9.68 சதவீதமும், பழங்கள் 7.48 சதவீதமும் அதிகரித்துள்ளன.
மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் பிரிவில் டீசல் 12.11 சதவீதமும், பெட்ரோல் 17.7 சதவீதமும் குறைந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இதன் விலைகள் குறைந்தன. சமையல் எரிவாயு விலை 7.9 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
தொழில்துறை உற்பத்தி பொருட்கள் பிரிவு ஏற்ற இறக்கமாக உள்ளது. சிமென்ட் விலை 8.29 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்க்கரை, தோல் பொருள்கள், உருக்கு பொருள்கள் முறையே 4.24 சதவீதம், 2.74 சதவீதம், மற்றும் 5.9 சதவீதமும் விலை குறைந்துள்ளன.
மாத அடிப்படையில் அமைந்த ஆண்டு பணவீக்க விகிதம் கடந்த ஆறு மாதங்களாக குறைந்து வருகிறது. 2014 அக்டோபர் மாதம் 1.66 சதவீதமாக இருந்தது. இது நவம்பர் மாதம் மைனஸ் 0.17 சதவீதமாக குறைந்தது. கடந்த நான்கு மாதங்களில் டிசம்பர் மாதம் மைனஸ் 0.5 சதவீதமாகவும், ஜனவரியில் மைனஸ் 0.95 சதவீதம், பிப்ரவரியில் மைனஸ் 2.06 சதவீதம், மார்ச் மாதம் மைனஸ் 2.33 சதவீதமாகவும் குறைந்து வந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை நுகர்வோர் விலை குறியீடு புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட் டன. இதில் கடந்த மூன்று மாதங் களில் இல்லாத அளவுக்கு குறைந்து 5.17 சதவீதமாக நுகர்வோர் விலை குறீயீடு இருந்தது, முக்கியமாக உணவுப் பொருட்களில் விலை குறைந்திருந்தது.
வட்டி விகிதங்கள் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி தூண்டி வருகிறது. நிதிக் கொள்கையின் விளைவுகள் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சாதகமாக இருக்கிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பயறு வகைகள், இறைச்சி மீன் மற்றும் பால் பொருட்கள் உணவு பணவீக்கத்திலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. தற்காலிகமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறைந்துள்ளது என்று மத்திய வங்கி கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT