Published : 12 Apr 2015 10:14 AM
Last Updated : 12 Apr 2015 10:14 AM
தமிழக செம்மர கூலி தொழிலாளர் களை பல முறை எச்சரித்தும் அவர் களிடம் மாற்றம் ஏதும் வரவில்லை. செய்த குற்றங்களையே மீண்டும், மீண்டும் செய்து வந்தனர். என ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்துள்ளார்.
கிழக்கு கோதாவரி மாவட்டம், காகிநாடாவில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர போலீ ஸார் மற்றும் வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். மாநில எல்லைகளில் கூடுதல் தணிக்கை சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் வாகன சோதனைகளில் ஈடுபடுகின்றனர். ஆயினும் கடத்தல் முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர் ஆகிய பகுதிகள் வழியாக செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு அதிரடி போலீஸார் நியமனம் செய்யப்பட்டு சேஷாசலம் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுவரை சுமார் 3, 500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளிகள் மீது பி.டி ஆக்ட் எனும் சட்டம் பதிவாகி நீதிமன்றம் மூலம் தண்டனையும் பெற்றுள்ளனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் உள்ளதாக வந்த தகவல்கள் மூலம், அவர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி, தமிழக டிஜிபியுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க சிறப்பு படை டிஜிபி காந்தாராவ் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று இந்த தொழிலை கைவிடும்படி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆயினும் பலனில்லை. மீண்டும், மீண்டும் பணத்திற்கு ஆசைப்பட்டு குற்றம் என்று தெரிந்தும் இதே தொழிலை செய்ய ஆந்திராவிற்கு வருவதை அவர்கள் நிறுத்தவில்லை.
வேண்டுமென்றே தமிழக கூலி தொழிலாளர்கள் மீது போலீஸார் என்கவுன்ட்டர் செய்யவில்லை. போலீஸாரை தாக்கியதால்தான் அந்த சூழ்நிலை ஏற்பட்டது. தமிழக அரசும், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க பல முயற்சிகளை மேற் கொண்டது. இறுதியில் என்க வுன்ட்டர் மூலம்தான் இதற்கு தீர்வு காணப்பட்டது. இந்த என்கவுன்ட்டர் மூலம் இரு மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசி சுமூக தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT