Published : 31 Mar 2015 09:46 PM
Last Updated : 31 Mar 2015 09:46 PM
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் நடத்தப்படும் திருமணங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகின்றன.
இங்கு திருமணத்துக்கு மணமகன் தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.100 என்ற வீதத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.
உத்தரப் பிரதேசம், ராம்பூர் நகர் அருகே டான்புரி தண்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் டெல்லியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 10 ஆயிரம் பேர் வசிக்கும் இக் கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இங்கு திருமணங்கள் மிகவும் சிக்கனமாகவும் கட்டுப்பாட்டுடனும் நடத்தப்படுகின்றன. திருமண கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் அடிக்கக்கூடாது, தெருக்களில் ஆடி, பாடி ரகளை செய்யக் கூடாது, திருமணத்துக்காக சமைக்கப்படும் உணவுப் பொருட்களில் சிறிதளவுகூட வீணாக்கக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக திருமணத்துக்கு மணமகன் குடும்பத்தார் தாமதமாக வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு ரூ.100 என்ற வீதத்தில் அவர்கள் எவ்வளவு நேரம் தாமதமாக வருகிறார்களோ அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதம் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT