Published : 18 Apr 2015 07:47 AM
Last Updated : 18 Apr 2015 07:47 AM
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் பட் ஸ்ரீநகரில் நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ஸ்ரீநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த புதன்கிழமை நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது. இதுதொடர்பாக ஹுரியத் தலைவர் கிலானி, மசரத் ஆலம் பட் உள்ளிட்டோர் மீது பட்காம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தேச விரோத செயலில் ஈடுபட்டதாக மசரத் ஆலம் பட் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஹப்பாகடல் பகுதி யில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் மசரத் ஆலம் கூறியதாவது:
இது புதுமையானது அல்ல. அதிகார பலத்தில்தான் காஷ்மீரில் ஆட்சி நடத்தப்படுகிறது. பாகிஸ் தான் தேசியக் கொடியை பறக்க விடுவதும் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் போடுவதும் விடுதலை முழக்கம் எழுப்புவதும் 1947-ம் ஆண்டிலிருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலீஸார் மீது கல்வீச்சு
கைது, வீட்டுக்காவல் சம்பவங் களைக் கண்டித்து ஸ்ரீநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது போலீஸாரை குறிவைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியெறிந்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர். எனினும் ஸ்ரீநகரில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து பிரிவினைவாத தலைவர் மிர்வாஸ் உமர் நிருபர்களிடம் பேசியபோது, கிலானியும் மசரத் ஆலமும் சட்டவி ரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், அவர் களில் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு சட்டத்தை மீறுகிறது என்று குற்றம்சாட்டினார்.
தீவிரவாதத்துக்கு இடமில்லை
காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
கொள்கை, கோட்பாடுகள் விஷயத்தில் மாறுபட்டு நின்றா லும் ஆட்சி நிர்வாக வசதிக் காகவே பாஜக-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் கொள்கை, கோட்பாடுகளை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணிக்கிறது. மாநில அரசுக்கு உரிய ஆலோசனை, அறிவுரைகளை வழங்குகிறோம்.
தேசியவாதம், தேசப்பற்று விஷயத்தில் மத்தியிலும் மாநிலங்கள் அளவிலும் பாஜகவின் நிலைப்பாடு ஒன்றுதான். தீவிரவாதம், பிரிவினைவாதத்தை அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனுமதிக்க மாட்டோம்
காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் கூறியபோது, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத. தேச விரோத, ஆத்திரமூட்டும் செயல்களை முப்தி அரசு சகித்துக்கொள்ளாது என்பதை பிரிவினைவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றுவது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT