Published : 01 Apr 2015 07:22 AM
Last Updated : 01 Apr 2015 07:22 AM
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட தையடுத்து யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் வரும் 14-ம் தேதி புதிய கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது கேஜ்ரிவாலுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சியின் ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர். ஆனால், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கேஜ்ரி வால் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக யாதவும் பூஷணும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் கருத்து வேறு பாடு காரணமாக, கட்சியின் அரசியல் விவகாரக் குழு மற்றும் தேசிய செயற்குழுவிலிருந்து யாதவும் பூஷணும் நீக்கப்பட்டனர். இதையடுத்து, வரும் 14-ம் தேதி தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்ப தாக யாதவும் பூஷணும் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து பிரசாந்த் பூஷண் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது: என்னையும், யாதவையும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. கடந்த 28-ம் தேதி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற விதம் தவறானது. கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ள தொண்டர்களுடன் வரும் 14-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். புதிய கட்சி தொடங்கப்படுமா என்று கேட்கிறீர்கள்.
அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தொண்டர்கள் என்ன விரும்பு கிறார்களோ அதைப் பொறுத்து அரசியல் கட்சியாகவும் இருக்க லாம். புதிய அரசியல் கட்சி தொடங்குவதைவிட, இப்போதுள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
கடந்த மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு டெல்லியில் ஆட்சி யைப் பிடிப்பதற்காக சட்டப் பேரவை கலைக்கப்படும்வரை கேஜ்ரிவால் பல்வேறு முயற்சி களை மேற்கொண்டார். குறிப் பாக, காங்கிரஸ் ஆதரவைப் பெறுவதற்காக சமூக ஆர்வலர் நிகில் தே மூலம் ராகுல் காந்தியை தொடர்புகொள்ள முயன்றார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கவும் அவர் முயற்சி செய்தார். இவ்வாறு பூஷண் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT