Published : 21 Apr 2015 07:24 AM
Last Updated : 21 Apr 2015 07:24 AM

கணவர் தன்பாலின உறவாளர் என தெரிந்ததால் அதிர்ச்சி: எய்ம்ஸ் இளம் டாக்டர் தற்கொலை

டாக்டர் கணவர் தன்பாலின உறவாளர் என தெரிந்து, அவரு டைய கொடுமைகள் தாங்க முடியாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இளம் டாக்டர் தற்கொலை செய்து கொண் டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையின் மயக்கவியல் துறை யில் பணியாற்றியவர் டாக்டர் பிரியா வேதி (30). இவருடைய கணவர் கமல் வேதி. இவரும் அதே மருத்துவமனையில் பணியாற்றுகிறார். கடந்த சனிக்கிழமை மத்திய டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலில் மணிக்கட்டை அறுத்துக் கொண்டு டாக்டர் பிரியா வேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தங்கியிருந்த அறையில் தற்கொலைக்கான கடிதமும் முகநூலில் அவர் எழுதியிருந்த விவரங்களும் கிடந்தன. அவற்றை போலீஸார் கைப்பற்றினர். ஹோட்டலுக்கு சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளார். அன்று பிற்பகல் முகநூலில் விரிவான கடிதம் ஒன்று எழுதி உள்ளார். மறுநாள் காலை 8.30 மணிக்கு ஹோட்டல் ஊழியர் அறையை சுத்தம் செய்ய சென்றபோதுதான், பிரியா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து டாக்டர் கமல் வேதியை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘கை மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டதால் ரத்தம் வெளியேறி பிரியா இறந்துள்ளார். நாங்கள் சென்றபோது ரத்த வெள்ளத்தில் பிரியா இறந்து கிடந்தார். கையிலும் ஊசி மூலம் விஷத்தை செலுத்தியதாகத் தெரிகிறது. எனினும் பிரேதப் பரிசோதனையில்தான் முழு விவரமும் தெரிய வரும்’’ என்றனர்.

முகநூலில் உருக்கமான கடிதம்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கும் கமலுக்கு திருமணம் நடந்தது. இந்த 5 ஆண்டுகளுமே அவருடைய மனைவி என்று பெயரளவில் வாழ்ந்து வந்தேன். எங்களுக்குள் இதுவரை தாம்பத்திய உறவு நடந்ததில்லை. திருமணமாகி 6 மாதங்களுக்குப் பிறகு, என்னுடன் உறவு வைத்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை அறிய, கமலுடைய லேப் டாப்பை ஆராய்ந்தேன். அப்போது, போலியான ஜிமெயில் ஒன்றை பார்த்தேன். அதில், தன்பாலின உறவாளர்களாக உள்ள தன் நண்பர்களுடன் அவர் பேசுவதும் தன் பாலின உறவாளர்களின் வீடியோக்களைப் பார்ப்பதும் தெரிய வந்தது.

அதுபற்றி கமலிடம் நான் கேட்டதற்கு, தன்னுடைய மெயிலை யாரோ ஊடுருவி தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று கூறினார். சந்தேகத்தோடுதான் அதை நான் நம்பினேன். அதன்பிறகு கமல் என்னை சித்திரவதை செய்ய தொடங்கினார். கடந்த 5 ஆண்டுகளாக மனரீதியாக என்னை அவர் சித்திரவதை செய்து வந்தார். இந்நிலையில், தான் ஒரு தன்பாலின உறவாளர்தான் என்று கடந்த மாதம் என்னிடம் ஒப்புக் கொண்டார். இந்த விவரங்களை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஏனெனில் கமலை நான் மிகவும் நேசித்தேன். எல்லா பிரச்சினைகளும் ஒரு நாள் சரியாகிவிடும் என்று நினைத்தேன்.

ஆனால், என் மீதும் என் குடும்பத்தார் மீதும் கமல் குறை கூறிக் கொண்டே இருந்தார். பெயருக்கு மட்டுமே நான் மனைவியாக இருந்தேன். நேற்று இரவு எல்லை மீறி என்னை கமல் சித்திரவதை செய்துவிட்டார். இனி அவருடன் வாழ்ந்து பலனில்லை. என் வாழ்க்கையை சீரழித்த கமல் மனிதனே இல்லை.

கமலை போன்ற யாராவது தன் பாலின உறவாளர்களாக இந்த சமூகத்தில் இருந்தால், தயவு செய்து பெண்ணை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். உங்களைக் காப்பாற்றி கொள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அவரது குடும்பத்தையும் சீரழித்துவிடாதீர்கள்.

இவ்வாறு தனது முகநூலில் பிரியா கூறியுள்ளார். இதற்கிடையில், தகவல் அறிந்து பிரியாவின் குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி வந்தனர். கமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவர்களும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர். பிரியா தற்கொலை குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x