Published : 23 Apr 2015 08:44 AM
Last Updated : 23 Apr 2015 08:44 AM

செம்மரம் கடத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனை: ஆந்திர அமைச்சரவையில் தீர்மானம்

செம்மரம் கடத்தினால் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பது என நேற்று ஹைதரா பாத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் வரை நடந்த இக்கூட்டத்தில் வனத்துறை சட்டத்தை கடுமையாக்குவது என தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி இனி செம்மரங்களை வெட்டி கடத்தினால், ஜாமீனில் வெளியே வராதபடி வழக்கு பதிவு செய்வது என்றும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் செம்மர கடத்தல்காரர்களின் சொத்துகளை முடக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆந்திர மாநில தலைநகர் பகுதியை 225 கி.மீட்டரில் இருந்து 350 கி. மீட்டர் வரை விஸ்தரிக்கவும் திட்டமிடப்பட்டது. விஜயவாடாவில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. புதிய தலைநகர் அமைக்கும் பணியை டெண்டர்கள் மூலம் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. நீர்-மரம் திட்டத்துக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x