Last Updated : 12 Apr, 2015 10:26 AM

 

Published : 12 Apr 2015 10:26 AM
Last Updated : 12 Apr 2015 10:26 AM

மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை பாஜக எதிர்ப்புக்கு பயந்து நிறுத்தமாட்டோம்: கன்னட எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் உறுதி

பெங்களூருவில் டவுன் ஹால் எதிரே கடந்த சில தினங்களுக்கு முன் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும், கன்னட எழுத்தாளரு மான கிரீஷ் கர்னாட், சாகித்ய அகாதெமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் மரளுசித்தப்பா உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனையாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாட்டிறைச்சி பிரியாணி மற்றும் வறுவலை சாப்பிட்டார். மேலும் பொது மக்களுக்கும் வழங்கினர்.

இதற்கு பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளும், பல்வேறு கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பொது இடத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டு, இந்துக்களின் மனதை புண்படுத்திய கிரீஷ் கர்னாட், மரளுசித்தப்பா ஆகியோர் மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்தன.

பாஜக போர்க்கொடி

இந்நிலையில் பாஜக முன் னாள் சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், “கிரீஷ் கர்னாட் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் பாஜகவின் அடுத் தக்கட்ட போராட்டத்தை விரை வில் அறிவிப்போம்'' என்றார்.

இதுகுறித்து கிரீஷ் கர்னாட், `தி இந்து'விடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித் திருப்பது நகைப்புக்குரிய‌து. தற்போது அதே சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

பாஜக அரசின் இந்த செயல்பாடுகளால் மாட்டிறைச்சி உண்போரின் எண் ணிக்கை கணிசமாக உயர்ந்திருப் பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாட்டிறைச்சி உண்பது தனி நபரின் உரிமை. அதை அரசே தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரா னது. பொதுமக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு எப்படி தீர்மானிக்க முடியும்?

இந்திய உணவு கலாச்சாரத் துக்கு எதிரான சட்டத்தை மகாராஷ்டிர அரசு கைவிட வேண்டும். இதைக் கண்டித்து முற்போக்கு அமைப்புகள் நாடு முழுவதும் பல்வேறு போராட் டங்களை தொடங்கியுள்ளன. பெங்களூருவில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பாஜகவின் எதிர்ப்புக்கும், மிரட்ட லுக்கும் பயந்து மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் எக் காரணம் கொண்டும் நிறுத்தப் படாது” என்றார்.

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது, “சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவர‌வரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசு தலையிட முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x