Published : 22 Apr 2015 08:31 AM
Last Updated : 22 Apr 2015 08:31 AM
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.
மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெறுவது தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று பிரதமரை சந்திக்க இருந்தது.
இந்நிலையில் பிரதமர் அலுவல கத்தில் இருந்து கர்நாடக அரசுக்கு நேற்று வந்த கடிதத்தில், “பல்வேறு பணிகள் காரணமாக கர்நாடக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே தாங்கள் குறிப்பிட்ட தேதியில் பிரதமரை சந்திக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT