Published : 16 Apr 2015 08:56 AM
Last Updated : 16 Apr 2015 08:56 AM
ஜனதாவில் இருந்து பிரிந்த தலை வர்களின் ஆறு கட்சிகள் மீண்டும் ஒன்றிணைகின்றன. லாலுபிரசாத் யாதவும் தனது ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை இணைக்கவுள்ளார். இதில் அக்கட்சியின் எம்.பி.யும் லாலு பிரசாத்துக்கு நெருக்க மானவருமான பப்பு யாதவ் எனப்படும் ராஜேஷ் ரஞ்சன் யாதவ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் அதிருப்தி தலைவரான ஜிதன் ராம் மாஞ்சி, ஜனதா கட்சிகள் சங்கமத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து வருகிறார். முதல்வர் பதவி யிலிருந்து நீக்கப்பட்ட மாஞ்சி, ‘இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’ என்ற பெயரில் ஓர் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு சில எம்எல்ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “அரசியலமைப்பு சட்டத்தின் 10 ஆவது அட்டவணைப்படி, கலைக் கப்படவிருக்கும் கட்சியின் ஒரு எம்எல்ஏ அல்லது எம்பிக்கு அதில் விருப்பம் இல்லை எனில், அவர் அக்கட்சியின் அடையாளத்தை ஏற்று நடத்தலாம்” எனக் குறிப் பிட்டுள்ளார். இதன்மூலம் ஜனதா கட்சிகள் இணைப்புக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தை அதன் சின்னம் மற்றும் கொடியுடன் கைப்பற்றும் முயற்சியில் மாஞ்சி இறங்கியுள்ளார்.
ஜனதா இணைப்பு குறித்த இறுதி முடிவு எடுப்பதற்காக லாலு கடந்த 6-ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டினார். அதில், பப்புவுக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த பப்பு அக்கூட்டம் முடியும் முன் பாகவே வெளியேறினார்.
இந்நிலையில் தனது ‘யுவ சக்தி’ அமைப்பு சார்பில் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறார். அக்கூட்டங்களில், லாலு குடும்ப அரசியலை ஊக்குவிப்பதுடன், முதல்வர் நிதிஷ்குமாருடன் இணைந்து பிஹாரில் ஊழலை வளர்க்க துணை போகிறார்’ எனக் குற்றம்சாட்டி வருகிறார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பப்புவின் ஆதரவாளர்கள் கூறும் போது, ‘லாலு ,அவரது அரசியல் வாரிசாக பப்பு அல்லது ரகுவன்ஸ் பிரசாத் என வேறு மூத்த தலைவர்களை அமர வைப்பதே சரியானது.
ஆனால் லாலு தன் மகன்தான் உண்மையான வாரிசு எனக் கூறுவதுடன், இதுவரை முக்கிய எதிர்கட்சியாக எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைகிறார். இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே ஜனதா இணைப்புக்குப் பிறகு ராஷ்ட்ரீய ஜனதா தளம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப் போம்” என்றனர்.
பப்பு எடுக்கும் முயற்சிக்கு எம்எல்ஏ.க்கள் சிலர் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT