Published : 20 Apr 2015 10:29 AM
Last Updated : 20 Apr 2015 10:29 AM
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி இன்று தொடங்குகிறது. முதல்நாளிலேயே சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அவையில் அனல் பறக்கும் விவாதம் எழும்பும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நலன் பயக்கும் வகையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் மே 8-ம் தேதி நிறைவடைகிறது. மாநிலங்களவையின் கூட்டம் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கி மே 13-ல் முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT