Last Updated : 21 Apr, 2015 10:12 AM

 

Published : 21 Apr 2015 10:12 AM
Last Updated : 21 Apr 2015 10:12 AM

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் மரணம்

திருப்பதி வந்திருந்த ஒடிசா முன் னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் (89) மாரடைப்பால் காலமானார்.

ஒடிசா முன்னாள் முதல்வரும் அசாம் முன்னாள் ஆளுநருமான ஜே.பி. பட்நாயக் திருப்பதியில் உள்ள சம்ஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற வந்திருந்தார். நேற்று முன் தினம் திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் இரவு திருப்பதியில் தங்கி னார். இந்நிலையில் நள்ளிரவு அவ ருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தேவஸ் தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்க டேஸ்வரா மருத்துவமனையில் (சிம்ஸ்) சேர்த்தனர் அங்கு சிசிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மருத்துவமனையில் அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத் தினர். பின்னர் தனி விமானம் மூலம் அவரது உடல் புவனேசுவரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

3 முறை முதல்வர்

ஒடிசா மாநிலம், புரி மாவட்டம், ராமேஸ்வரத்தில் 3.1.1927 அன்று பிறந்தவர் ஜானகி பல்லபா பட்நாயக் என்கிற ஜே.பி. பட்நாயக். கடந்த 1949-ல் இவர் தனது முதுகலை பட்டப்படிப்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

1980-ல் மத்திய அமைச்சராக பணியாற்றினார். அதே ஆண்டில் ஒடிசா முதல்வராக பதவியேற்ற பட்நாயக் தொடர்ந்து 2 முறை அப்பதவியில் இருந்தார். மீண்டும் அவர் 1995-99 வரை 3-வது முறை யாக முதல்வராக பதவி வகித்தார். 2009-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.

ஜே.பி. பட்நாயக் மறைவை யொட்டி ஒடிசா அரசு நேற்று விடுமுறை அறிவித்தது. 1 வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x