Published : 01 Apr 2015 08:20 AM
Last Updated : 01 Apr 2015 08:20 AM
ஹைதராபாத்தில் முதன் முறையாக, போக்குவரத்தை கட்டுப்படுத்த பெண் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் முதன் முறையாக பெண் போக்கு வரத்து போலீஸார் மாதாபூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக இவர் களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டது. இவர்கள் 100 சாலை கூட்டு ரோடு, சைபர் டவர்ஸ் போன்ற இடங்களில் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள் போக்குவரத்து பணி களுடன், இரவு நேரத்தில் மது அருந்தி வாகனம் செலுத்தும் பெண்களை கண்காணிக்கும் பணி யிலும் ஈடுபடுகின்றனர்.
சைபராபாத் காவல் நிலையத் துக்கு உட்பட்ட இடங்களில் அடிக்கடி மது அருந்தி கார்களை ஓட்டும் பெண்களை போலீஸார் கைது செய்துகின்றனர். ஆனால் அதற்கு பெண் போலீஸார் அவசியம் என்பதால், தற்போது போக்குவரத்து பெண் போலீஸாரை இப்பணிக்கு உபயோகப்படுத்தி வருகின்றனர். இந்த பெண் காவலர்கள் நகரங் களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT