Published : 24 Apr 2015 09:34 AM
Last Updated : 24 Apr 2015 09:34 AM
குரங்குகளுக்கு கருத்தடை செய்ய இமாச்சலப் பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் குரங்குகள் அதிக எண்ணிக்கை யில் உள்ளன. அவற்றால் மனிதர் களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவ தாகக் கருதிய அம்மாநில அரசு, கடந்த 2007ம் ஆண்டு முதல் குரங்குகளுக்குக் கருத்தடை செய்து வருகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் ஏழு கருத்தடை மையங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் ஓர் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 5 ஆயிரம் குரங்குகளுக்குக் கருத் தடை செய்யப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் இப்போது வரை 94,334 குரங்குகளுக்குக் கருத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் கருத்தடை முறையாக மேற்கொள்ளப்படு கிறதா என்பதை ஆராய ஹரியா ணாவில் உள்ள லாலா லஜ்பதி ராய் கால்நடைப் பல்கலைக் கழகம், 'பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்' அமைப்பு மற்றும் 'பீப்பிள் ஃபார் எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பெடா)' ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் ஆய்வு மேற்கொண் டன.அப்போது குரங்குகளுக்குக் கருத்தடை செய்வதில், எந்த வித மான நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளும் பின்பற்றப்படுவ தில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் கருத்தடையின் போது, குரங்குகளுக்குச் சரியான உணவு கொடுக்காதது, கருத்தடைக்கு முன்னும் பின்னும் ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக் காதது, கருத்தடை செய்யப்படாத குரங்குகளைப் பயிற்சி பெறாத நபர்கள் பிடித்துச் செல்வது, நீண்ட காலத்துக்கு கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பது உள்ளிட்ட தவறுகளும் நடைபெறு வதாகத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து 'பெடா' அமைப்பு இந்த விஷயத்தை இந்திய விலங்கு நல வாரியத்திடம் கொண்டு சென்றது. அதனைப் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட வாரியம், இவ்வாறு குரங்குகள் துன்பத்துக்கு ஆளாகாததை உறுதி செய்யும் வரை, கருத்தடை செய்யக் கூடாது என்று உத்தர விட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT