Published : 13 Apr 2015 08:06 AM
Last Updated : 13 Apr 2015 08:06 AM
குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த பெண்களுக்குக் கல்வி வழங்குவது ஒன்றுதான் வழி என்பது தெரிகிறது என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில், ‘உடல் நலம், பெண்கள், முன்னேற் றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (ஏடிஆர்ஐ), இந்திய மக்கள்தொகை பவுண்டே ஷன் (பிஎப்ஐ) ஆகியவை இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது:
குழந்தை பிறப்பு தொடர்பான புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது சில உண்மைகள் தெரிய வந்துள்ளன. நாட்டில் 10-வது படித்த பெண்கள் சராசரியாக 2 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். பிஹாரிலும் அதே நிலைதான் காணப்படுகிறது. பிளஸ் 2 வரை பெண்கள் படித்தால் இந்தப் பிறப்பு விகிதம் 1.7 ஆக குறைகிறது. பிஹாரில் அது 1.6 ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட குறைவு.
கல்வியறிவு பெற்ற பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, குழந்தை பிறப்பை கட்டுப் படுத்த பெண்களுக்குக் கல்வி வழங்குவது ஒன்றுதான் வழி என்பது தெரி கிறது. இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். எனவே, பிஹார் மாநிலத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்க எல்லா கிராமங்களிலும் பிளஸ் 2 பள்ளிகள் தொடங்கப்படும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும்.
பிஹாரில் எல்லா பெண் குழந்தைகளும் பிளஸ் 2 வரை படித்து விட்டால், குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிந்து விடும். இந்திய அளவில் சராசரி பிறப்பு விகிதம் 2.4 ஆக உள்ளது. ஆனால், பிஹாரில் 3.9 ஆக உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை 25 சதவீதம் மக்கள்தொகை உயர்கிறது. ஆனால், நிலப்பரப்பு உயராது. எனவே, பிறப்பு விகிதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பெண்கள் கல்வியறிவு பெற்றால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல், குழந்தை திருமணங்களை, பெண் சிசுக் கொலைகளை தடுக்க உதவும். அதேநேரத்தில் ஆண் - பெண் விகிதாச்சாரமும் சமநிலை பெறும்.
ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலை நீடித்தால், ஹரியாணா மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது போல, ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு பெண்களே கிடைக்க மாட்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறை, சித்திரவதை, ஒழுக்க கேடுகள் உட்பட பல பிரச் சினைகள் தோன்றும். இந்தப் பிரச் சினையில் நாம் கவனம் செலுத்த தவறினால், சமுதாயம் அழிந்து விடும். சட்டத்தின் மூலம் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. மக்கள் மனநிலையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அதற்கு கல்வி ஒன்றுதான் வழி.
திறந்த வெளியைக் கழிப்பிடங் களாகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அந்தப் பழக்கத்தால் நோய்கள் பரவுவது மட்டுமன்றி பெண்களுக்கு எதிரான வன்முறை களும் நிகழ்கின்றன. எனவே, வீடுகளில் முதலில் கழிப்பறை கட்டுங்கள் என்று கடந்த 2007-ம் ஆண்டு முதல் பிஹார் மக்களை வலியுறுத்தி வருகிறேன். சமூக தலைவர் ராம் மனோகர் லோஹியா பெயரில் கழிப்பறை கட்டும் திட் டத்தை நாட்டிலேயே முதலில் அறிமுகப்படுத்தியது பிஹார் மாநிலம்தான். நதிகளை தூய்மைப் படுத்தவும், கழிப்பறை கட்டவும் லோஹியா தீவிர முயற்சிகள் செய்தார். ஆனால், இதுபற்றி வேறு சிலர் (பாஜக.வினர்) இப்போது பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT