Published : 05 Apr 2015 11:01 AM
Last Updated : 05 Apr 2015 11:01 AM
நீதித் துறை சீர்திருத்தங்கள் தொடர்பான 3 நாள் மாநாடு டெல்லியில் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கியது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 24 உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங் கேற்றனர். புனித வெள்ளி தினத் தில் மாநாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் ஆட்சேபனை தெரிவித் திருந்தார். எனினும், திட்டமிட்ட படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமை யில் மாநாடு தொடங்கியது.
இந்நிலையில், நீதிபதிகளுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விருந்தில் பங்கேற்க இயலாது என்று கூறி பிரதமர் மோடிக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் கடந்த 1-ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தங்கள் (பிரதமர் மோடி) இல்லத்தில் நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. எனினும், புனித வெள்ளி மற்றும் அதைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை வார இறுதியில், நீதித் துறை சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு நடத்த வேண்டாம். வேறு நாட்களில் மாநாட்டை நடத்தலாம் என்று எனது கருத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தேன். கிறிஸ்தவர்களின் புனிதமான நாட்களாகக் கருதப் படும் புனித வெள்ளி, அதை தொடர்ந்து வரும் புனித ஞாயிறு (ஈஸ்டர்) பண்டிகையின் போது மாநாட்டை ஏற்பாடு செய்தது ஏன்?
புனித வெள்ளியன்று மாநாடு நடப்பதால், அதில் பங்கேற்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள், கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாள். அந்த நாளில் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது எங்களின் கடமை. பெற்றோர், மூத்தவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய கடமை எனக்குள்ளது. இந்த நாட்களில் நான் எனது மாநிலமான கேரளாவில் இருப்ப தால், தாங்கள் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்க இயலாது.
தீபாவளி, ஹோலி, தசரா, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்றவை மிக முக்கியமான பண்டிகை நாட்களாகும். தீபாவளி, தசரா, ஹோலி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகையின் போது விடுமுறை உள்ளது போலவே, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற நாட்களில் கிறிஸ்தவர்களுக்கு விடுமுறை உள்ளது.
இனிமேல் முக்கிய நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்யும் போது, மற்ற புனிதமான நாட்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தங்களை வேண்டிக் கொள் கிறேன். எல்லா மதங்களுக்கும் புனித நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த நாட் களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்க வேண்டு கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT