Published : 31 Mar 2015 05:12 PM
Last Updated : 31 Mar 2015 05:12 PM
இரண்டு குடியரசுத்தலைவர்களால் நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீவிரவாத மற்றும் திட்டமிட்ட குற்ற தடுப்பு மசோதா (ஜிசிடிஓசி) குஜராத் சட்டப்பேரவையில் நேற்று பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.
சந்தேகத்துக்கு இடமான நபர்களின் தொலைபேசி உரை யாடலை போலீஸார் இடைமறித்து கேட்கவும், அதைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழங்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.
தீவிரவாத செயலை கட்டுப் படுத்துவதற்காக, மகாராஷ்டிர அரசால் மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டம் கடந்த 1999-ல் கொண்டுவரப்பட்டது. இதைப் பின்பற்றி குஜராத் அரசு கொண்டுவந்த குஜராத் திட்டமிட்ட குற்றத் தடுப்பு மசோதாவை (ஜியுஜேசிஓசி) கடந்த 2004 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் முறையே அப்போதைய குடியரசுத் தலைவர்களான ஏபிஜே அப்துல் கலாமும் பிரதிபா பாட்டீலும் நிராகரித்தனர். அதை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினர்.
அதற்குப் பிறகும் இந்த மசோதாவில் எவ்வித மாற்றமும் செய்யாமல் மூன்றாவது முறை யாக சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவை தீவிரவாத மற்றும் திட்டமிட்ட குற்றத் தடுப்பு மசோதா (ஜிசிடிஓசி) என்று பெயர் மாற்றம் செய்து மாநில உள்துறை அமைச்சர் ரஜினிகாந்த் பட்டேல் நேற்று மீண்டும் அறிமுகம் செய்தார்.
இதன் மீது நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. அப்போது, தொலை பேசி உரையாடலை இடைமறித்து கேட்க போலீஸுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் அதிகாரி யிடம் அளிக்கும் வாக்குமூலத்தை ஆதாரமாக கருதும் பிரிவு உள்ளிட்ட வற்றை நீக்க வேண்டும் என எதிர்க் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர் கள் வலியுறுத்தினர்.
குறிப்பாக, “இந்த மசோதாவை நிராகரித்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கூறிய ஆலோ சனையின்படி சர்ச்சைக்குரிய சில பிரிவுகளை நீக்க வேண்டும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா தெரிவித்தார்.
ஆனால், நாட்டு நலனை கருத்தில் கொண்டே இந்தப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். இதையடுத்து இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மூன்று முறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஆனால் குஜராத் முன்னாள் முதல்வ ரான நரேந்திர மோடி இப்போது பிரதமராக இருப்பதால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என்று குஜராத்தில் ஆளும் கட்சி யான பாஜக நம்புகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT