Published : 24 Apr 2015 09:40 AM
Last Updated : 24 Apr 2015 09:40 AM

ஜம்மு காஷ்மீரில் ஆயுதக் குவியல் பறிமுதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து நேற்று ராணுவத்தினரும், போலீஸாரும் ஆயுதக் குவியல் ஒன்றைக் கைப்பற்றினர். ராணு வத்தினருக்கும், தீவிரவாதிகளுக் கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதிகள் அந்த ஆயுதங்களை அங்கே விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மணிஷ் மேத்தா கூறியதாவது:

ராணுவமும் போலீஸாரும் இணைந்து கிஷ்த்வார் மாவட்டத் தில் தேடுதல் பணியை மேற்கொண்ட னர். அப்போது குச்சால் கிராமத்தில் இருந்து பிகா இயந்திரத் துப்பாக்கி, 100 சுற்று தோட்டாக்கள், .303 ரக துப்பாக்கிகள் இரண்டு, அவற்றுக் கான 16 சுற்று தோட்டாக்கள், 12 போர் ரக துப்பாக்கிகள் இரண்டு, ஒரு வெடிகுண்டு ஏவுகணை, 16 வெடிகுண்டுகள் மற்றும் ஒரு ரேடியோ செட் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும், தீவிரவாதிகள் 12 போர் ரக துப்பாக்கிகள் மற்றும் .303 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. எனவே, அவற்றை அருகிலிருக்கும் கிராம பாதுகாப்புக் குழு உறுப் பினர்களிடமிருந்தோ அல்லது அப் பகுதி போலீஸாரிடமிருந்தோ தீவிர வாதிகள் பறித்து வந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எனினும், இவை ராணுவத்தின ருடன் நடந்த மோதலின்போது தீவிர வாதிகள் விட்டுச் சென்றவையா அல்லது எதிர்காலத்தில் பயன் படுத்துவதற்காக தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்தவையா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x