Published : 20 Apr 2015 12:55 PM
Last Updated : 20 Apr 2015 12:55 PM
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கத்துவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பீரங்கிக் குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சர்வதேச எல்லையில் உள்ள அடர்த்தியான புதர்களில் பதுங்கியபடி முன்னேறிய பாகிஸ்தான் படையினர் 20 மீட்டர் அளவுக்கு முன்னேறி வந்து தாக்குதல் நடத்தினர். எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணிக்குத் திடர்ங்கிய தாக்குதல் இரவு 10.15 மணி வரை நீடித்தது. குடியிருப்புப் பகுதிகளில் சில பீரங்கிக் குண்டுகள் விழுந்தன. இருப்பினும், இத்தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இப்போதைக்கு எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்றார்.
எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்த இரு நாட்டுக்கும் இடையே உள்ள தடை ஒப்பந்தத்தை மீறியும் அவ்வப்போது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT