Published : 27 Apr 2015 08:14 AM
Last Updated : 27 Apr 2015 08:14 AM
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் சிக்கித் தவித்த 1050 இந்தியர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட்டரில், “நேபாளத்தில் சிக்கி தவித்த இந்தியர்களுடன் காத்மாண்டிலிருந்து புறப்பட்ட விமானங்கள் நாடு திரும்பின. மேலும் அங்கு சிக்கி உள்ளவர்களை மீட்பதற்காக கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.
நேபாளத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் அல்லது மின்னஞ்சல் மூலம் இந்த அறையை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்வதற்காக மாநில வாரியாக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT