Published : 21 Apr 2015 01:07 PM
Last Updated : 21 Apr 2015 01:07 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், யெச்சூரி மூழ்கும் கப்பலின் மாலுமி என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
சிவசேனாவின் சாம்னா இதழில், "சீதாராம் யெச்சூரி மூழ்கும் கப்பலின் மாலுமி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் வலுவிழந்துவிட்டது. வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் அந்தஸ்து அக்கட்சிக்கு இல்லை.
இதற்கு முன்னர் பொதுச் செயலாளராக இருந்து பிரகாஷ் காரத்தும் சிறப்பாக செயல்படவில்லை. மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் தூக்கி எறியப்பட்டது. இதற்கு, பிரகாஷ் காரத்தின் திறமையற்ற தலைமையே.
ஒரு காலத்தில் மக்களவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்கள் 50 பேர் இருந்தனர். இப்போது 10 எம்.பி.க்கள் கூட இல்லை.
இத்தகைய சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூழ்கும் கப்பலின்ன் மாலுமியாக தேர்வாகியுள்ளார்.
யெச்சூரி தனிப்பட்ட முறையில் தலைசிறந்த திறமையாளர். ஆனால் அவர் கைகளில் சுவடுகள் இல்லாத கட்சியின் நிர்வாகம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளே இல்லாத கிராமத்துத் தலைவர் போல் நிற்கிறார் யெச்சூரி" இவ்வாறு சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT