Last Updated : 24 Apr, 2015 09:48 AM

 

Published : 24 Apr 2015 09:48 AM
Last Updated : 24 Apr 2015 09:48 AM

ஓபிசிக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த பரிசீலிக்கவில்லை: மத்திய அமைச்சர் பதில்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு (ஓபிசி) தனி அமைச்சகம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சமூக நீதித்துறை அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜர் கூறியதாவது:

சமூக நீதித் துறை அமைச்சகத் தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு என தனி மையம் உள்ளது. இந்த பிரிவு ஓபிசி பிரிவினர் நலத் திட்டங்களை கண்காணிக்கும். இப்போதைக்கு ஓபிசிக்கு தனியாக அமைச்சகம் ஏற்படுத்தும் திட்டம் இல்லை என்றார்.

நாடாளுமன்றத்துக்கு வந்த சச்சின்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாநிலங்களவை உறுப்பினரு மான சச்சின் டெண்டுல்கர் நேற்று அவைக்கு வந்தார்.

மாநிலங்களவையின் புதிய கூட்டத் தொடர் நேற்று தொடங் கியது. பிற்பகல் 12 மணிக்கு அவர் வந்தார். உடனே இதர உறுப்பினர்களின் பார்வை அவர் மீது திரும்பியது. திமுக உறுப்பினர் டி.சிவா உள்ளிட்டோர் அவரை வாழ்த்தி கைகுலுக்கினர்.

மாநிலங்களவைக்கு 2012 ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார் டெண்டுல்கர். கடந்த கூட்டத்தில் நடந்த 19 அமர்வில் 3 நாட்கள் மட்டுமே அவர் அவைக்கு வந்தார். கடந்த குளிர்காலக் கூட்டத்திலும் 22 அமர்வில் 3 நாட்களே அவர் அவை நடவடிக்கையில் பங்கேற்றார்.

75 ஆயிரம் பேருக்கு ஒரே அதிகாரி

நாட்டில் மொத்தம் 5000 பதிவு பெற்ற திட்டமிடல் அதிகாரிகள் உள்ளனர். அதாவது நகரங்களில் உள்ள 75 ஆயிரம் மக்களுக்கு ஒரே ஒரு திட்டமிடல் அதிகாரி உள்ளார். இந்த தகவல் மாநிலங்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x