Last Updated : 09 Apr, 2015 10:30 AM

 

Published : 09 Apr 2015 10:30 AM
Last Updated : 09 Apr 2015 10:30 AM

12 மணி நேர ‘பந்த் - கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்று கேரளாவில் 12 மணி நேர ‘பந்த்' நடைபெற்றது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது அம்மாநிலத்தில் இந்த ஆண்டில் நடைபெறும் மூன்றாவது வேலை நிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு அமைப்பு கள் நேற்று வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

காப்பீட்டு பிரீமியம் கட்டணம் மற்றும் பெட்ரோலியப் பொருட் கள் விலை உயர்வைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர் சங்கமும், பணப் பயிர் விலை வீழ்ச்சியைக் கண்டித்து விவசாயிகள் சங்க மும், மீனாகுமாரி ஆணைய அறிக்கையை அமல்படுத்தக் கூடாது என்று மீன்பிடி ஒருங்கி ணைப்புக் குழுவும் வேலைநிறுத் தத்தில் ஈடுபட்டன.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு கடைகள் மற்றும் அலுவலகங்கள் அடைக்கப் பட்டிருந்தன. நகரத்தில் ஆங் காங்கே சில பேருந்துகள் இயங்கிய போதும் கிராமப்புறங்களில் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கடலோர கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நேற்று நடைபெறவிருந்த பல் கலைக்கழகத் தேர்வுகள் வேறொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டி ருந்தது. மாலை 6 மணி அளவில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x