Published : 09 Apr 2015 02:52 PM
Last Updated : 09 Apr 2015 02:52 PM
மேற்கு வங்க மாநில பர்த்வான் மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
34 வயதான சாஹேப் ஹெம்ப்ராம் என்ற விவசாயி தனது விளைச்சலுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காததாலும், பருவம் தவறி பெய்த மழை காரணமாக பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்ததாலும் பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பர்த்வான் மருத்துவமனைக்கு இவரை எடுத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனினிறி இறந்தார்.
இவரது சகோதரர் சுனில் ஹெம்ப்ராம் கூறும்போது, “தன் நிலத்தில் பயிர் செய்ய ரூ.50,000 கடன் வாங்கியிருந்தார் சாஹேப், விளைச்சலுக்கு ஏற்ற வருவாய் கிடைக்கவில்லை. மேலும் அவர் பயிர் செய்த உருளைக்கிழங்கு மற்றும் பிற பயிர்கள் மழை காரணமாக சேதமடைந்தது.
இதனால் கடனை அடைக்க வழி தெரியாமல் மனமுடைந்த நிலையில் சாஹேப் தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறினார்.
இந்த மாவட்டத்தில் உருளை பயிர் செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது கடனினால் அல்ல சொந்த காரணங்களினால் என்று மாவட்ட நிர்வாகம் கூறிவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT