Published : 10 Apr 2015 08:30 AM
Last Updated : 10 Apr 2015 08:30 AM
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் என்கவுன்ட்டரில் உயிரி ழந்த 20 தமிழக தொழிலாளர் களுக்கு ஆந்திர அரசு சார்பில் நஷ்ட ஈடு வழங்க முடியாது என ஆந்திர உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா தெரிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் ஹைதராபாதில் நேற்று நடந்தது. இதில் என்கவுன்ட்டர் குறித்து ஆந்திர உயர்நீதி மன்றத் தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு சார்பில் விளக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, தலைமை செயலர் கிருஷ்ணாராவ், மாநில போலீஸ் டிஜிபி ராமுடு உட்பட உயர் வனத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா செய்தியாளர் களிடம் கூறியது: திருப்பதி சம்பவம் குறித்து முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விரைவில் உண்மைகள் வெளிவரும். மேலும் தமிழக முதல்வரின் கடிதத்துக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளிப்பார். மனித உரிமை ஆணையம், மாநில உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கும் இதுகுறித்து அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆந்திர அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தமிழர்களை வேண்டுமென்றே என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
20 சடலங்களும் ஒப்படைப்பு
திருப்பதியில் 20 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதில் பலியானவர்கள் திருவண்ணாமலை, விழுப்புரம், அரூர் பகுதிகளைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிகள்.
திருப்பதி ரூயா மருத்துவ மனையில் மறுநாள் காலை முதல் இரவு வரை அனைவரின் சடலங்களுக்கும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பத்திரிகை களில் வந்த புகைப்படங்களைப் பார்த்த இறந்தவர்களின் உறவினர் கள் சடலங்களை பெற்றுக்கொள் வதற்காக திருப்பதி வந்தனர். இவர்கள் அடையாளம் காட்டிய தன் அடிப்படையில், நேற்று முன்தினம் 7 பேரின் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று மேலும் 13 பேரின் சடலங்கள் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டன. சடலங்களைப் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனங்களில் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT