Published : 08 Apr 2015 09:42 AM
Last Updated : 08 Apr 2015 09:42 AM

10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு டெல்லியில் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பத்து ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிப்பதற்குத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று உத்தரவு பிறப் பித்துள்ளது.

நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இதுகுறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

டென்மார்க், பிரேசில், சீனா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள‌ பல நாடுகள் டீசல் வாகனங்களுக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளன. அல்லது தடை விதிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அல்லது அதிக வரிகளை விதிப்பதன் மூலம் டீசல் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

டீசல் வாகனங்கள் வெளி யேற்றும் புகையைச் சுவாசித்து அதன் மூலம் மக்கள் நோய்களுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது என்று நாங்கள் கவலைப்படுகிறோம். அந்த நிலை ஏற்படாதவாறு அதுதொடர்பான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு நாங்கள் ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக தற்போது, கனரக வாகனமோ அல்லது இலகு ரக வாகனமோ எதுவானாலும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அத்தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் டெல்லியில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x