Published : 25 Apr 2015 09:20 AM
Last Updated : 25 Apr 2015 09:20 AM

ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை விவகாரம்: டி.வி. நிகழ்ச்சியில் அசுதோஷ் கண்ணீர்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை எதிர்த்து சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பேரணி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கஜேந்திர சிங் என்ற‌ விவசாயி ஒருவர் பேரணி நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த விவாதம் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிபரப்பானது. அந்த விவாதத்தில் கஜேந்திர சிங்கின் மகளும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அசுதோஷும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது கஜேந்திர சிங்கின் மகளைப் பார்த்து, "உங்கள் தந்தையை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது" என்று கூறி மனமுடைந்து அழுதார். மேலும் இந்தச் சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக, விவசாயி தற் கொலை செய்துகொண்டவுடன் பேரணியை முடித்துக் கொள்ளா மல் இருந்ததற்காகவும், அந்தப் பேரணியின் முடிவில் தான் உரையாற்றியது தவறு எனவும் கூறி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய‌ ஒருங் கிணைப்பாளருமான‌ அர்விந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோரினார்.

ஆனால் 'கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்பதன் மூலம் எனது மகன் எனக்குத் திரும்பக் கிடைத்துவிடப் போவதில்லை' என்று கஜேந்திர சிங்கின் தந்தை பன்னே சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x